பொருளாதார அபிவிருத்தி : சிங்கப்பூர் இலங்கை |
அணிந்துரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி செல்வரத்தினம் சந்திரசேகரம் அவர்களினால் எழுதப்பட்ட ‘பொருளாதார அபிவிருத்தி: சிங்கப்பூரும் இலங்கையும் அரசியற் பொருளாதார ஒப்பியல் நோக்கு” எனும் நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
கலாநிதி சந்திரசேகரம் எமது பல்கலைக்கழகத்தில் பொருளியல் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறி 1999 இல் உதவி விரிவுரையாளராக இணைந்து கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணிப் பட்டம் பெற்றவர் பின்னர் 2004 இல் மக்கள் சீனக்குடியரசிற்கு புலமைப்பரிசில் பெற்று சென்று அங்குள்ள புகழ்பெற்ற குவாசோங் விஞ்ஞான தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (HUST) 2008 இல் ‘இலங்கையில் பொருளதார வளர்ச்சிக்கும் பணவீக்கத்திற்குமான சமூக அரசியல் காரணிகள்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர் அவரது இந்த ஆய்வுக்கட்டுரை ஜேர்மனியில் உள்ள புகழ்பெற்ற Lambert கல்வி வெளியீட்டு சமூகத்தினால் நூல் வடிவம் பெற்றுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கலாநிதி சந்திரசேகரத்தின் அரசியல் பொருளியல் துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் பல உலகின் புகழ்பெற்ற ஆய்வுச்சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளது. அத்துடன் பல்வேறு நாடுகளின் சர்வதேச ஆய்வரங
|